மோட்டார் சைக்கிளை திருடி வீடு சென்ற பின்னர் பார்சலில் அனுப்பிய கோவை நபர்

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (19:16 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளியூர்களில் சிக்கியிருக்கும் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த மாநிலத்திற்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்
 
மேலும் பேருந்து மற்றும் ரயில் வசதி ஓரளவுக்கு இருந்தாலும் அதில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பலர் நடந்தே சென்று விற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த ஊரான தஞ்சை செல்வதற்காக குடும்பத்துடன் முயன்ற போது அவருக்கு எந்தவித போக்குவரத்து வசதிகள் கிடைக்கவில்லை 
 
இதனை அடுத்து அவர் தனது வீட்டின் அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி, அந்த மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு பயணம் செய்தார். அதன் பின்னர் வீடு சேர்ந்தவுடன், தான் திருடிய மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளருக்கு பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
மோட்டார் சைக்கிளை தன்னுடைய அவசரத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் இருப்பினும் உங்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்