நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை, முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று பேசியது, தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா, தன் மனைவி கூறிய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் ஆன்மீகப் பெரியோரின் எண்ணங்களைத் தான் ஜோதிகாவும் கூறினார், அவர் கூறிய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார். அதில் விவேகானந்தர், திருமூலர் போன்ற மகான்களின் கருத்துகளை மேற்கோள்காடியிருந்தார்.
இந்நிலையில், ஜோதியாக சுட்டிக்காட்டிப் பேசிய தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில், இன்று ஒரு ஊழியரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.