சொத்து தகராறில் அண்ணனை பெட்ரோல் ஊத்தி கொளுத்திய தம்பி!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:44 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வெள்ளை. இவருக்கு ரமேஷ், புருஷோத்தமன் மற்றும் ராஜசேகர் ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். குடும்பத்தின் பூர்வீக சொத்தான இதை மூன்று பேருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதில் புருஷோத்தமனின் பங்கையும் தானே  வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார் ராஜசேகர். அதற்காக முதல் தவணையாக 7 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த தவணையைக் கொடுக்க தாமதப்படுத்திக் கொண்டே வந்துள்ளார் ராஜசேகர். இது சம்மந்தமாக புருஷோத்தமனுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று புருஷோத்தமன் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார் ராஜசேகர். தீ உடல் முழுவதும் பரவியதை அடுத்து புருஷோத்தமன் அலறியபடியே மாடியில் இருந்து கீழே விருந்து படுகாயமடைந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவர் மீது இருந்த தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து ராஜசேகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்