நாயை நாய் என திட்டியதால் 3 வருடம் காத்திருந்து நடந்த கொடூர கொலை!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:02 IST)
திருச்செந்தூர் அருகே நாயை திட்டியதற்காக நடந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்செந்தூரை சேர்ந்த பால் லிங்கம் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாயை அப்பகுதியை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் நாயே எனவும் மேலும் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டி விரட்டியதாக தெரிகிறது. 
 
இதன் பின்னர் பால் லிங்கத்திற்கும் லிங்கராஜிற்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து முடிந்து 3 வருடம் ஆன நிலையில் இதற்காக பழி தீர்க்க பகையுடன் காத்திருந்த லிங்கராஜ் சமயம் பார்த்து பால் லிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதனால் சம்பவ இடத்திலேயே பால் லிங்கம் உயிரிழந்தார். 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் லிங்கராஜை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்