முதல் முறையாக நாய்க்கு டப்பிங் செய்துள்ள நடிகர் சூரி!

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:01 IST)
நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக அன்புள்ள கில்லி படத்தில் நாய் ஒன்றுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

அன்புள்ள கில்லி என்ற படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஒரு நாய்தான் நடித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அந்த நாயின் மனக்குரலாக ஒலிக்கும் வசனங்களுக்கு யார் டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என அதன் இயக்குனர் ஸ்ரீநாத் யோசித்துக் கொண்டிருந்த போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் நகைச்சுவை நடிகர் சூரியை பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து சூரியிடம் இயக்குனர் இதுகுறித்து பேசவே உடனடியாக சம்மதம் சொல்லி டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் சூரி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்