மூடப்படுகிறதா மக்கள் தொலைக்காட்சி?... இணையத்தில் பரவும் தகவல்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (10:33 IST)
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான மக்கள் தொலைக்காட்சி மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரை சேனல்களில் மிகவும் வித்தியாசமான தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி. மண் மணம் கமழும் பல நிகழ்ச்சிகளை வழங்கிய மக்கள் தொலைக்காட்சி தாய்மொழி தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை வழங்கியது. இந்த சேனலில் ஒளிபரப்பான சந்தனக்காடு என்ற தொலைக்காட்சி தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற தொடர்.

இந்நிலையில் சமீபகாலமாக போதுமான வருவாய் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக சொல்லப்படும் நிலையில் இந்த மாதத்தில் மக்கள் தொலைக்காட்சியை நிரந்தமாக மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மக்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்