மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி திடீர் கைது

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (04:11 IST)
மதுவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியாேரை போலீசார் கைது செய்தனர்.
 

 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்த நிலையில் அவர் தனது தந்தை ஆனந்துடன் சிவகாசி பேருந்து நிலையத்தில் மதுவின் தீமைகள் குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினார். மேலும், அங்கு இருந்த பொது மக்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துக் கூறினார்.
 
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர்.