தமிழகத்தில் நவதோயா பள்ளிகளை தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (13:17 IST)
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.


 

 
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடங்கப்பட்டது. கிராம புற மாணவர்கள் தரமான கல்வியை பெற நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 
 
நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதனால் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சார்ப்பில்  வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் கற்பிக்கப்படும் என எழுத்துபூர்வமாக வழங்க உத்தரவிட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் கற்பிக்கப்படும் என எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டதை அடுத்து நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்த கட்டுரையில்