அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்; விலைப்பட்டியல் வைக்க உத்தரவு!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:41 IST)
தமிழக டாஸ்மாக் மது விற்பனையகங்களில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல மதுக்கடைகளிலும் மதுபானங்களின் விலைப்பட்டியல் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ‘வாடிக்கையாளர்கள் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மதுபானக்கடைகளிலும் விலைப்பட்டியல் பலகை வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்