சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்! – டிஜிபி ஆஜராக கோர்ட் உத்தரவு!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (11:30 IST)
சாத்தான்குளத்தில் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன் மரணமடைந்த விவகாரத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து நடத்த மதுரை கிளை நீதிமன்றம் முன்வந்துள்ளது.

அதை தொடர்ந்து இன்று தொடங்கும் இந்த வழக்கில் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி டிஐஜி காணொளி வாயிலாக ஆஜராக வேண்டுமென மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்