ஆன்லைன் கல்விக்கு அரசின் இணையதளம்! – பள்ளிக்கல்விதுறை ஏற்பாடு!

புதன், 24 ஜூன் 2020 (08:59 IST)
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் பிரபலமாகி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்புகளுக்கான பிரத்யேக தளத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தங்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு ஏதுவாக ஆன்லைன் தளம் ஒன்றை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளத்தின் மூலம் மாணவர்கள் பாடங்களை கட்டணமின்றி இலவ்சமாக படிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாடங்களை படிக்க தேவையான வசதிகள் கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக இல்லை என்ற சிக்கலும் உள்ள நிலையில் அரசு அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்