புதிய வகை கொரோனாவால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் மா சுப்பிரமணியன்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (13:42 IST)
புதிய வகை கொரோனா வைரஸால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பரவும் புதிய வகை கொரோனா வைரசால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார். 
 
தினசரி 5000 பரிசோதனைகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டின் தற்போது காய்ச்சல் பரவல் வெகுவாக குறைந்து உள்ளது என்று தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்