ஜெயம் ரவி படத்துக்கு 100 கோடி பட்ஜெட்டா? மீண்டும் இணையும் ‘கோமாளி’ கூட்டணி!

வியாழன், 23 மார்ச் 2023 (07:00 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர்த்து வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை. ஆனால் அந்த குறையைப் போக்க இப்போது அவர் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப இந்த ஆண்டில் அடுத்து பொன்னியின் செல்வன் 2, இறைவன், சைரன் மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படம் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது அவரின் 32 ஆவது படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் கோமாளி மற்றும் லவ் டுடே புகழ் இயக்குனர் பிரதீப் ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் கேரியரில் மிக அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்