சேகர் பாபு இல்லை ’செயல்’ பாபு – அமைச்சரைப் பாராட்டிய மு க ஸ்டாலின்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:21 IST)
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி செயல்படுத்தப்படும் திட்டங்களில் அறநிலையத்துறையும் , அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபுவும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அறநிலையத்துறையின் நிலங்களை மீட்டது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியது என சேகர் பாபு பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஒருகால பூஜை திட்டத்தில் இருக்கக்கூடிய கோயில்களைச் சார்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும், ரூ.1,000 வழங்கும்  என முதல்வர் அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை ஒரு வாரத்துக்குள் இன்று தொடங்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் சேகர் பாபு என்று சொல்வதை விட செயல் பாபு என்றுதான் சொல்லவேண்டும் என அவரைப் பாராட்டியுள்ளார். மேலும் அவரால் அறநிலையத்துறை கொடுத்து வைத்தத் துறையாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்