யுடியூபில் அதிகளவு பிராங்க் என சொல்லப்படும் வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆனவர் பிராங்க் பாஸ் சூர்யா. இந்நிலையில் இவருக்கு திருச்சியைச் சேர்ந்த விஷுவல் கம்யுனிகேஷன் மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால் சூர்யா இதுபோல பல பெண்களிடமும் பேசி வருவதால் மாணவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.