திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள்.. மகளிர் உரிமைத்திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:36 IST)
திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும் நாள் என கவிஞர் வைரமுத்து  கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். 
 
செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சற்றுமுன் காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:
 
பேரறிஞர் அண்ணாவின்
பிறந்த நாளில்
பிறந்த மண்ணில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைக்கும்
கலைஞர் மகளிர்
உரிமைத் தொகைத் திட்டம்
தாய்க்குலத்தின்
சுதந்திரத்திற்கும்
சுயமரியாதைக்கும்
பக்கபலமிருந்து
தக்கபயன் நல்குவதாகும்
 
திராவிட இயக்க வரலாற்றில்
இந்த நாள்
குறிக்கப்படுவது மட்டுமல்ல
பொறிக்கப்படும்
 
இந்தியாவின்
பிற மாநிலங்களும்
தளபதி ஏற்றி வைக்கும்
இந்தத் திருவிளக்கில்
தீபமேற்றிக் கொள்ளலாம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்