மகளிர் உரிமை தொகை பெற பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகள்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:40 IST)
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் நாளை முதல் வழங்கப்பட இருக்கும் நிலையில் இன்றே ஒரு சிலருக்கு இந்த பணம் வந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கலைஞர் மகளிர் உரிமை தொகைய திட்டத்தை காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில்  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு 6000 பிரத்தியேக ஏடிஎம் கார்டுகள் வந்துள்ளதாகவும் இவை வேலூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வங்கிகள் மூலம்  முதல் கட்டமாக 6000 ஏடிஎம் கார்டுகள் வந்துள்ளதாகவும் இந்த ஏடிஎம் கார்டுகளை காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூரில் உள்ள தாலுகாக்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்