டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்- வைரமுத்து பாராட்டு

வியாழன், 14 செப்டம்பர் 2023 (13:09 IST)
டாக்டர் பட்டம் பெற்றுள்ள  ஆட்டோ ஓட்டுனர் லூர்துராஜை தன் இல்லத்திற்கு நேரில் அழைத்த  கவிஞர் வைரமுத்து, அவருக்கு சால்வை போர்த்தி வாழ்த்தியுள்ளளார்.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் லூர்துராஜ். இவர், திரைப்பட பாடலாசிரியர் ''கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல் புதுக்கவிதைக் கூறுகள்'' என்ற தலைப்பில், ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த கவிஞர் வைரமுத்து, ஆட்டோ ஓட்டுனர் லூர்துராஜை தன் இல்லத்திற்கு நேரில் அழைத்து அவருக்கு சால்வை போர்த்தி வாழ்த்தியுள்ளளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, ‘’ஆட்டோ ஓட்டுனர் வர்க்கத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறீர்கள்'' என்று  ஓட்டுனர் லூர்துராஜை  பாராட்டியதுடன்,  ''உயர் பள்ளியோ, கல்லூரியோ அங்கு இவரது படிப்பிற்கேட்ட பணி வாங்கிக் கொடுங்கள்'' என்று அருகில் உள்ளவரிடம் கூறினார்.

மேலும் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்
 
‘கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்’
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்
 
வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்
 
ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்
 
வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்