ஒரு நாள் முன்கூட்டியே உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. வானிலை எச்சரிக்கை..!

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (14:58 IST)
அக்டோபர் 22ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன்கூட்டியே, அதாவது அக்டோபர் 21ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் நிலையில், இதன் காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்