வங்கக் கடலில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, சென்னையை பயமுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் வரும் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறிய போது, அக்டோபர் 20ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய மேலடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து கூறியபோது, இந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்த நிலையில் நீடிக்கும் என்றும், எனவே சென்னை உள்பட தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், எந்தெந்த பகுதியில் பலத்த மழை ஏற்படும் என்பதை ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்புதான் அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.