அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற, தமிழ்நாடு உள்பட சில மாநில அதிகாரிகளுக்கு ₹2000 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அமெரிக்காவில் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அறிவித்திருந்தது.
ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கும் தொடர்பு உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதோடு, தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.