ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

Mahendran

வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:15 IST)
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தோன்ற இருப்பதை அடுத்து, தமிழகத்திற்கு கனமழை ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரண்டு கடல்களில் ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுகள் உருவாகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக் கடலில் அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு அந்தமான் பகுதியில் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், அரபிக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது இனிமேல் தான் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால், அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக உள்பட தென்னிந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்