எல்லோரும் தாழிட்டு குளிக்கவும்; எந்நேரமும் ஆளுநர் ஆய்வுக்கு வரலாம்: சுப வீரபாண்டியன் குசும்பு!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (16:06 IST)
தமிழக முதல்வர் பன்வாரிலால் புரோஹித் நேற்று கடலூரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் கீற்று குளியலரையில் ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டிருந்ததை பார்த்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
 
இந்த செய்தி நேற்று காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் அதிகமாக கலாய்க்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று பல மீம்ஸ்கள் வந்தன. பலரும் ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஆளுநர் கீற்று தடுப்பை மீறி இளம்பெண் குளிப்பத்தை பார்த்ததாக கூறப்படும் சம்பவத்தை திராவிடர் கழகத்தை சேர்ந்த சுப வீரபாண்டியன் கலாய்த்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கடலூரில் ஆய்வுக்குச் சென்றிருந்த ஆளுநர் ஒரு குளியலறைக்குள் செல்ல, உள்ளே குளித்துக் கொண்டிருந்த பெண் பதறியடித்து ஓடி வந்ததாக விகடன்.காம் செய்தி வெளியிட்டுள்ளது. எல்லோரும் இனிமேல் தாழிட்டு விட்டுக் குளிக்கவும். எந்நேரமும் ஆளுநர் ஆய்வுக்கு வரக்கூடும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்