தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது. நேற்றுவரை பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல், ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு, அதிமுக 214 பதவிகளையும், திமுக 243 பதவிகளையும், பாஜக 7 பதவிகளையும்,காங்கிரஸ் 15 , மதிமுக பதவிகளையும், மதிமுக 1 பதவியையும் கைப்பற்றியுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.