சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (15:57 IST)
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 16 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில்,  எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
 
சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வெளிப்படையான நிர்வாகத்தை தற்போதைய அரசு தர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இதற்காகத்தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
 
இதற்கு, தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி நேரடி ஒளிபரப்பை தவிர்க்க கூடாது என்று குறிப்பிட்டார். 
அடுத்த கட்டுரையில்