தள்ளிப்போகும் கபாலி ரிலீஸ் தேதி - பரபரப்பு பின்னணி?

கே.என்.வடிவேல்
புதன், 22 ஜூன் 2016 (15:38 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 ம் தேதிக்கு தள்ளிப் போகும் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
 

 
அகில இந்திய அளவில் மட்டும் அல்லாது உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி.
 
ஜூலை முதல் தேதி கபாலி படம் வெளியிடலாம் என தயாரிப்பு நிர்வகாம் முதலில் முடிவு செய்தது. ஆனால், 
முஸ்லீம்களின் புனித பண்டிகையான ரம்ஜான் நோன்பு ஜூலை 6 ம் தேதியே நிறைவு பெறுகிறது.
 
எனவே, ஜூலை 6 ம் தேதிக்கு முன்பு படத்தை வெளியிட்டால், வெளிநாடுகளிலும், குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் கபாலி படத்தை முஸ்லீம் சகோதர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என ரகசிய தகவல் கிடைத்ததாம்.
 
இதனையடுத்து, ஜூலை 15 ம் தேதி அன்று கபாலியை உலகம் முழுக்க உலாவ விட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
 
 
அடுத்த கட்டுரையில்