கருணைக்கொலை செய்துவிடுங்கள்: ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்யும் பட்டதாரி கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:24 IST)
கருணைக்கொலை செய்துவிடுங்கள்
அரசு வேலை கொடுங்கள் அல்லது என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்துவரும் மாற்றுத்திறனாளி பட்டதாரி ஒருவர் வேதனையுடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலில் இஞ்சிமரப்பா விற்பனை செய்து வருபவர் பார்வையற்ற பட்டதாரி அரவிந்தன். இவர் பிஏ., பி.எட்., எம்ஏ., எம்பில் படித்து உள்ளார் என்பதும் வேலை எதுவும் கிடைக்காததால் புறநகர் ரயிலில் இஞ்சிமரப்பா விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எம்ஏ எம்பில் பட்டதாரியான தனக்கு அரசு வேலை கொடுங்கள் அல்லது தன்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று தமிழக அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ஊடகமொன்றுக்கு கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்