இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என சட்டத்தை கொண்டு வரவேண்டும் என ஜார்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது
இதுகுறித்து அமைச்சர் ஜகர்நாத் மதோ மேலும் கூறியபோது, ‘தனியார் பள்ளிகளில் படித்து விட்டு அரசு பணிக்கு மக்கள் செய்வது நியாயமில்லை என்றும் அரசாங்க வேலை வேண்டும் என நினைத்தால் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்த திட்டத்தை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்