இந்நிலையில் சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது : காவலர் திரு.அருண்காந்தி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், திரு.அருண்காந்தி அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.