சண்முகநாதன் மறைவிற்கு லியோனி இரங்கல்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:51 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் கலைஞர் கருணாநிதியை பற்றி  தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக திகழ்ந்து வந்தார். 
 
அவருக்கும்  கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார்.  
 
இந்நிலையில் அவரது மறைவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி  இரங்கல் தெரிவித்துள்ளதாவது, "முத்தமிழறிஞர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகள் பணிபுரிந்து கழக தொண்டர்களுக்கும் தலைவருக்கும் பாலமாக இருந்தவர். கலைஞரின் வாழ்விலும் தாழ்விலும் அவருடன் இருந்தவர் கோ சண்முகநாதன் ஐயா. அவருடைய முத்து விழாவில் எனக்கு 500 ரூ கொடுத்து  வாழ்த்தினார்.
என் ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்