வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்னே பயந்துவிட்டார்கள்! – எல்.முருகன்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (11:30 IST)
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி பெற்றுள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் முருகனின் அறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக தெரிவித்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கவும் அரசிடம் கோரியிருந்தது. ஆனால் வேல் யாத்திரை தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அதற்கு தடை விதிக்க விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “பாஜகவின் வெற்றிவேல் யாத்திரையை கண்டு அனைத்து கட்சிகளுக்கும் பயம் வந்துவிட்டது. அறுபடை வீடு வெற்றிவேல் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்” என கூறிடுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்