தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள், கல்லூரிகள் இயங்காமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் “நீதி அரசர்கள் நீதிமன்றம் வராமல் ஆன்லைனிலேயே வழக்குகளை விசாரிக்கிறார்கள், தீர்ப்பளிக்கிறார்கள். ஆனால் கொரோனா அபாயம் உள்ள நிலையில் மாணவர்கள் மட்டும் எப்படி ஒரே அறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.