இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து அதிகமாகி வருவதை அடுத்து, விலை குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகி வந்த தக்காளி, தற்போது 100 ரூபாய்க்கு 5 கிலோ என விற்பனை ஆகி வருவதாகவும், தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக அதன் விலை அடி மட்டத்திற்கு சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையின் ஒரு சில பகுதிகளில் எட்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், இதனால் இல்லத்தரசிகள் கூடை கூடையாக தக்காளியை வாங்கி செல்வதாகவும் தருகிறது. தக்காளி மட்டுமின்றி வெங்காயம் உள்பட பல காய்கறியின் விலை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.