பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று உயர்ந்து உள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 100 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவின்போது 368 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதேபோல், நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உயர்ந்துள்ளது. டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள், நேற்று 4000 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றதால், சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.