பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக்: அதிமுகவை கலாய்த்த குஷ்பு!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (10:43 IST)
சர்கார் படத்திற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவை எதிர்த்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் திரையுலகை சேர்ந்தவர்களும், சில அரசியல் கட்சி தலைவர்களும் அடக்கம். 

 
அந்த வகையில் தற்போது சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஆளும் கட்சியான அதிமுகவை கலாய்த்தும் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு ட்விட் செய்துள்ளார். 
 
குஷ்பு குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, தமிழ்நாட்டு மக்கள் மீது அரசு தனது அதிகாரத்தை தவறுதலாக திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்க பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களுக்கு பார்த்துவிட்டோம். அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள். பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக என்று ட்விட்டியுள்ளார். 
 
சர்கார் படத்தில் இலவசங்களை தூக்கி வீசுவது ஆகிய காட்சிகளும், சில வசனங்கள் ஆளும் கட்சியை நேரடியாக விமர்சிப்பதாகவும் உள்ளது. எனவே, இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் போரட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்