சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக தஞ்சையில் 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் 10 விஜய் ரசிகர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.