ஜமைக்காவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச்சூடு! திருநெல்வேலி இளைஞர் பலி!

Prasanth Karthick

வியாழன், 19 டிசம்பர் 2024 (10:24 IST)

ஜமைக்கா நாட்டில் கொள்ளைக் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வெஸ்ட் இண்டீஸ் தீவு நாடுகளின் ஒன்றான ஜமைக்கா நாட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் தீவில் தென்காசியை சேர்ந்த அரவிந்த் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு திருநெல்வேலியை சேர்ந்த 4 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

 

இந்நிலையில், ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் பணத்தை கொள்ளையடித்து விட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அங்கு பணியாற்றி வந்த விக்னேஷ் மீது குண்டு பாய்ந்ததில் அவர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இறந்த விக்னேஷின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விக்னேஷின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்