மோடி தமிழ்நாட்ல கால வெச்சாலே ’இத’ டிரெண்ட் ஆக்கிடுராங்கலே பா: டுவிட்டரில் வச்சு செய்த குஷ்பு

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (10:31 IST)
மோடி தமிழகத்திற்கு எப்பொழுது வந்தாலும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரரெண்ட் ஆக்கி விடுகிறார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.


மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான இன்று முற்பகல் சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மோடி வருகையையொட்டி டிவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி விடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்