முகநூலில் மோடி குறித்த சர்ச்சை கருத்து: மதிமுக நிர்வாகி கைது

ஞாயிறு, 27 ஜனவரி 2019 (09:03 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகளை தொடங்கி வைக்க இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். இன்று தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி மதிமுகவினர் முடிவு செய்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பிரதமர் மோடியை முகநூலில் தவறாக சித்தரித்ததாக சீர்காழி மதிமுக நகர செயலாளர் சத்தியராஜ் பாலு என்பவரை போலீசார் கைது கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிரதமர் குறித்து சத்தியராஜ் பாலு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாக பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியராஜ் பாலுவை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கு முன்னரும் முகநூல், டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துள்ளதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஒருசிலரும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒருசிலரும் இந்த கைது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்