முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு இந்த பாதுகாப்பு அவரை உளவு பார்க்கவாக இருக்கலாம் என அதிமுகவில் உள்ள சிலர் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம் என்பதால், அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
அவர் கூட்டணி குறித்து யார் யாரிடம் பேசுகிறார், என்னென்ன காய் நகர்த்துகிறார் என்பதை டெல்லி அவ்வப்போது அறிந்து கொள்ள இந்த Z பிரிவு பாதுகாப்பு உதவலாம் என்றும் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.