அதிகரித்த கொரோனா பாதிப்பு: மூடப்படுகிறது கொத்தவால்சாவடி மார்க்கெட்!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (11:27 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மற்றுமொரு மார்க்கெட்டும் மூடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 20 ஆயிரத்திற்கும் மேல் சென்னையில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. முக்கியமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட கொத்தவால்சாவடி மார்க்கெட் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பரவியதால் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது கொத்தவால்சாவடி மார்க்கெட் மூடப்பட்டால் ராயபுரம் மண்டல பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு பொருட்கள் போன்றவற்றிற்கு பெரும் பற்றாக்குறை ஏற்படும், அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்