ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும்: தமிழக கல்வித்துறை உத்தரவு

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (11:23 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கடைகள், பேருந்துகள், டாஸ்மாக் கடைகள், ஓட்டல்கள் என அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் தமிழக கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
 
இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த அலுவல்களை பார்ப்பதற்காக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வருவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்