3 நீதிபதிகளுக்கு கொரோனா ! வழக்குகள் விசாரணையில் மாற்றம்!

சனி, 6 ஜூன் 2020 (08:10 IST)
சென்னையில் மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து நீதிமன்றங்கள் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும், நீதிபதிகள் வீடுகளில் இருந்தே காணொலி காட்சி மூலமாக விசாரித்து வந்தனர். ஆனால் ஜூன் 1 தளர்வுக்குப் பிறகு நீதிபதிகள் தங்கள் அறைகளில் காணொலி காட்சிகள் மூலமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் உள்பட நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வழக்குகளை விசாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்