ஜாதிப்பெயர் எதற்கு? கே.எஸ்.அழகிரி மீது அதிருப்தி!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (15:38 IST)
கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் ஜாதிப்பெயர் குறிப்பிடுவதை பலரும் கண்டித்துள்ளனர். 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.
 
இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் சிபிசிஐடி போலீஸாரால் சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமாக காவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பும் தடை செய்யப்பட்டது.
 
இந்நிலையில் சாத்தான்குளம் விஷயத்தை அறிக்கையாக வெளியிடும் போது ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் பெயருடன் ஜாதி பெயரையும் சேர்த்து குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கட்சிக்குள் இருப்பவர்களே விமர்சித்துள்ளனர். 
 
ஜாதி, மதம், இனம், மொழி, ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டு கே.எஸ்.அழகிரி இவ்வாறு செய்திருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்