கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி.! முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள்.! சீமான் சவால்.!!

Senthil Velan
வியாழன், 11 ஜூலை 2024 (14:11 IST)
கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி என நான் பாடுகிறேன், முடிந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
 
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சீமான்,  என்னை விடவா துரைமுருகன் பேசிவிட்டார் என கூறினார்.  தன்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்கின்றனர் என்று சீமான் தெரிவித்தார்.

கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது என்றும் நான் பாடல் பாடுகிறேன் என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் என்றும் அவர் கூறினார். 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி, சதிகாரன் கருணாநிதி என நான் பாடுகிறேன் என்று சீமான் பாடல் பாடி காட்டினார். 
 
நீங்க பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுவீர்கள், தேள், பாம்புவை பிடிப்பீர்களா? புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா? முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்க ஆட்சிக்கு வந்ததால் உங்க அப்பாவை புனிதர் ஆக்க முயற்சிக்கிறீர்களா? என்றும் தமிழினத்திற்கு செய்த துரோகம் எல்லாம் மறந்து போய்விடுமா? என்றும் சீமான் தெரிவித்தார். 

தமிழினத்தின் துரோகி கருணாநிதி:
 
தமிழினத்தின் துரோகி கருணாநிதி என கடுமையாக சாடிய சீமான், இந்த நாட்டில், தமிழர் இன வரலாற்றில், தீய ஆட்சி மற்றும் தீய அரசியலின் துவக்கம் கருணாநிதி ஆட்சியில் தான் என்றும் இதனை யாராலும் மறுக்க முடியுமா என்றும் குறிப்பிட்டார்.

ALSO READ: தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டைகள்.! யாரை சொல்கிறார் ஜெயக்குமார்.?
 
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள், அநாகரீக அரசியல், சாராயம் வந்தது என்றும் சீமான் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்