பாஜக கூட்டணியில் பாமக களத்தில் இருந்தாலும், பாமக விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று சீமான் இருப்பதாக தெரிகிறது. இதை எடுத்துதான் சமீபத்தில் கள்ளச்சாராயம் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய போராட்டத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அதற்கு எடப்பாடி சார்பாக நன்றி தெரிவித்ததையும் பார்க்கும்போது அதிமுகவின் ஓட்டுகளை மறைமுகமாக தனது கட்சிக்கு கொண்டு வர சீமான் பிளான் போடுவதாக தெரிகிறது.
அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள், அப்படி என்றால் அவர்கள் தனக்கு வாக்களித்தால் தான் மிக எளிதில் இரண்டாவது இடத்தை பிடித்த விட முடியும் என்று சீமான் ப்ளான் போடுவதாகவும் அதோடு தேமுதிக வாக்குகளும் கிடைத்தால் இரண்டாவது இடம் உறுதி என்றும் சீமான் எண்ணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.