கட்சிக்கு எதிராக போலித்தனம்: பழனிச்சாமி அதிரடி கைது!

Webdunia
சனி, 25 ஜனவரி 2020 (11:17 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி. பழனிச்சாமி இன்று கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதும் தான் அதிமுகவில் இன்னும் இருப்பதாக கூறி, கட்சியை விமர்சித்து வந்ததாகவும் கட்சியின் பெயரில் போலி இணைய தளம் நடத்தி வந்ததாலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சூலூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்