தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும், நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ₹68,000 என்பதைத் தாண்டியது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 8,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 68,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,283 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,264 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது