ம. நீ.ம கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் வேட்பு மனு தாக்கல்

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (23:34 IST)
கரூரில் மக்கள் நீதி மைய கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மைய கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், மக்கள் நீதி மைய சின்னமான டார்ச் லைட் சின்னத்துடன் ஆங்காங்கே நூதனமுறையில் பிரச்சாரம் செய்து பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்