ப.சிதம்பரத்தினை மதிக்காத கரூர் காங்கிரஸ் எம்.பி ...

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (23:44 IST)
கொளுத்தும் வெயிலில் தாய்மார்களை காக்க வைத்த ராகுல் காந்தியால் கரூரில் பெண்கள் முகம் சுளிப்பு
 
காமராஜர் சிலையை கூட சுத்தம் செய்யாத காங்கிரஸ் கமிட்டியினர் ராகுல் சுத்தப்படுத்திய காட்சி ஆம்புலன்ஸ் க்கு வழிவிடாத காங்கிரஸ் கட்சியினரால் ஆம்புலன்ஸ் மாற்றுப்பாதைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
 
வெளியூரில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கும் கரூரில் இருந்த காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ராகுலை வரவேற்பதில் போட்டி
 
தமிழகத்தில் பொங்கலுக்கு முன்னரும், பொங்கல் அன்றும் நிலவி வந்த தட்பவெப்ப நிலை தற்போது மாறி, வெயில் கொளுத்துகின்றது. இந்நிலையில் கரூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி, கரூர் வருவதற்கு சுமார் 2 மணி நேரம் தாமதமானது, இந்நிலையில் பூரண கும்ப மரியாதை செலுத்தவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்க சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே காத்திருந்தனர். மேலும், தமிழக அளவில் முதன்முதலாக பெண்கள் சிகப்பு கலரில் சேலை அணிந்து ராகுல் காந்தியை வரவேற்க திரண்டு இருந்தனர். கரூரில் 88 டிகிரி பாரன்ஹீட் (அ) 31 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவிய நிலையில் ஏராளமான பெண்கள், தாய்மார்கள் கொளுத்தும் வெயிலில் கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடிப்பதற்கு குடிநீர் கூட வழங்காத நிலையில் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். ஒரு சிலர் மகளிரணி அதாவது மகிளா காங்கிரஸ் போதவில்லை என்று கருதி கூட்டணி கட்சி தானே திமுக என்று கருதி திமுக மகளிரணியினரையும் காங்கிரஸ் வரவேற்பில் பங்கேற்க வைத்தனர். இந்நிலையில் ராகுலின் வருகை சுமார் 2 மணி நேரம் தாமதமானது. மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி வருகைக்காக வழங்கப்படும் அடையாள அட்டையும் தருவதில் மெத்தனம் காட்டியதாகவும், ஒரு சில தொலைக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதி என்று கூறியதாலும் பத்திரிக்கையாளர்களும் இந்த செய்திகளுக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸார் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, பிற மாவட்டம், மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு சேர கூடியதால் கரூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டியினருக்கும், வெளியூரில் இருந்து வந்த காங்கிரஸ் கமிட்டியினருக்கும் இடையே ராகுலை வரவேற்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் கோவை சாலையின் வழியாக கரூர் நோக்கி, கரூர் அடுத்த காந்திகிராமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்த ஆம்புலன்ஸ் ஐ காங்கிரஸ் பிரமுகர்கள் தடுத்த காரணத்தினால் அந்த ஆம்புலன்ஸ் ல் சிகிச்சைக்கு சென்ற நோயாளி பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டார். ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசி தமிழர்களை கவர்வதற்காக மூன்று நாட்கள் வித்யாச உரையாற்றிய ராகுல்காந்தி கரூருக்கு வேஷ்டி சட்டையில் வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு வழியாக கரூருக்கு வந்த ராகுல் ஊதா கலர் டீசர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மக்களிடையே பேசினார். முன்னதாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது கல்வி கண் திறந்த காமராஜர் சிலையில் இருந்த அழுக்கினை நீக்கினார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பின்னர் காருக்கு சென்ற ராகுலுக்கு பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமில்லாமல், கட்சி நிர்வாகிகளும் பொன்னாடை அணிவிக்க முயன்றனர் அதை ஒரு பொருட்டாக மதிக்காத ராகுல், அனைத்து பொன்னாடைகளையும் வாங்கி அங்கேயே கீழே போட்டு சென்றார். அந்த பொன்னாடைகள் காலில் மிதிபடட்து. பின்னர் காங்கிரஸ் முக்கிய பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ராகுல் காந்தியினை காண சென்ற போது, கரூர் பாராளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ஜோதிமணி மதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கோபம் அடைந்த ப.சிதம்பரம் கடும் வெறுப்போடு காரில் ஏறி சென்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு, ராகுல்காந்தி முன்னரே கோஷ்டி பூசலா ? என்றும் கேள்வி எழு வைத்தது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்